கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று (31.12.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவில் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாமன்ற சாதாரணக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் வார்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் இன்று மத்திய மண்டலம், வார்டு எண்.82க்குட்பட்ட ராயல் தியேட்டர் கூட்செட் சாலை பகுதி மற்றும் வார்டு எண்.70க்குட்பட்ட சிரியன் சர்ச் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் கட்டுமானப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளை விரைவில் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, வார்டு எண்.84க்குட்பட்ட ஜி.எம்.நகர் மஜீத் காலனி, 3வது தெரு பகுதியில் தார் சாலை அமைப்பது தொடர்பாகவும், வார்டு எண்.70க்குட்பட்ட தியாகராயபுது 3வது வீதியில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவினை உடனடியாக சீரமைக்கவும் மாநகராட்சி ஆணையாளர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது, மண்டல குழுத்தலைவர் மீனாலோகு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
கோவை மத்திய மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு செய்தார் ஆணையர்
- by CC Web Desk
- Dec 31,2024