கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண்.66 மற்றும் 49க்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (02.01.2025) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டல பகுதிகளில் (வார்டு எண். 70, 82, 84) நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் 31.12.2024 அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவில் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிலையில் இன்று மத்திய மண்டலம், வார்டு எண்.66க்குட்பட்ட தாமுநகர், புலியகுளம் சாலை பகுதியில் மழைநீர் வடிகால் சீரமைப்பது தொடர்பாகவும், அம்மன்குளம் வடக்கு பகுதியில் சிறுபாலம் அமைப்பது தொடர்பாகவும் மாநகராட்சி ஆணையாளர், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வார சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, அம்மன்குளம் பாரதிபுரம் பகுதியில் சாலை சீரமைப்பது தொடர்பாகவும், வார்டு எண்.49க்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் செயல்படும் குழந்தைகள் மையத்தினையும் மாநகராட்சி ஆணையாளர், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளிடம் கலந்துரையாடினார்.
மேலும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பாப்பநாயக்கன்பாளையம், பழையூர் பாப்பம்மாள் லே-அவுட் பகுதியில் புதிதாக மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பாகவும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின்போது, மண்டல குழுத்தலைவர் மீனாலோகு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
இரண்டாம் நாளாக கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் ஆய்வு நடத்தினார் ஆணையர்!
- by CC Web Desk
- Jan 02,2025