கோவை  கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த கல்வியாண்டு உயிர்மருத்துவப் பொறியியல் படித்து முடித்த மாணவி செல்வி ரூத் இந்திய கடற்படையின் நிர்வாக பிரிவில் விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரியாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.

இந்த பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பெண் அதிகாரிகளில் மாணவி ரூத் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப பிரிவிற்கான நேர்முக மற்றும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி, இந்த மாத இறுதியில் கேரளாவின் எழிமலையில் உள்ள இந்தியக் கடற்படை அகாதமியில் நடைபெறும் பயிற்சியில் சேரவுள்ளார். 

மாணவிக்கு கல்லூரியின் செயலர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் சரவணன், மற்றும் பேராசிரியர் பிளையிங் ஆபிஸர் (Flying officer)சூரிய உமாதேவி (விமானப்படை என்சிசி அதிகாரி) ஆகியோர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

கல்லூரி முதல்வர் சரவணன் இதுபற்றி கூறும்போது;  இந்த  மாணவி  கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியின்  தேசிய மாணவர் படையின் விமானப்படை பிரிவில் சேர்ந்து பயிற்சி பெற்று 'சி' சான்றிதழ் பெற்றவர் ஆவர். இது, இவர் இந்திய கடற்படைராணுவ தேர்வில் வெற்றி பெற பெருத்தும் உதவியது,  என்றார்.