கோவை நேரு ஸ்டேடியத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு!
- by CC Web Desk
- Mar 10,2025
Coimbatore
கோவை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பல்வேறு மாணவ மாணவிகள் தங்கி விளையாட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு ஆய்வு மேற்கொண்ட அவர் மாணவர்களிடம் அவர்களின் தேவைகளை கேட்டு அறிந்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
மேலும் அங்குள்ள சமையல் கூடத்தினை ஆய்வு செய்த ஆட்சியர் அங்குள்ள அலுவலர்களிடமும் சமையல் செய்பவர்களிடம் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து அங்குள்ள மாணவர்களுடன் கால்பந்து விளையாடிய மாவட்ட கலெக்டர் மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளையும் அவர்கள் பெற்ற சான்றிதழ்களை பார்த்து பாராட்டினார்.