கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 'சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு  நிதி' மூலமாக சில பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. அதில் ஒன்றாக, கோவை VOC பார்க், பகுதியில் குடிநீர் ATM கொண்டுவரப்படவுள்ளது.

இந்த VOC பார்க் பகுதி என்பது விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற காரணத்திற்காக மக்கள் அதிகம் வரக்கூடிய பகுதியாக உள்ளது. இங்கு குடிநீர் ATM செயல்பாட்டுக்கு வரும் போதும் இதன் மூலம் தினமும் 1000க்கும் அதிகமானவர்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீரை இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியும் என்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு தேவைப்படும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை பூமி பூஜையுடன் இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்றபின்னர் இதை அவர் தெரிவித்தார்.

இதற்கு அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-

சட்டப்பேரவை கூட்டத்தொடரிலே கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தேன்.  இங்கு சாலைகள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் உள்ளது. இதை பற்றி சொல்லும்போது, சென்னைக்கு அடுத்து கோவைக்கு தான் அதிகம் நிதி தருகிறோம் என சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் கூறுகின்றார். 

ஆனால் கோவை தெற்கில் 24X 7 குடிநீர் திட்டப்பணி முடிந்த சாலைகளில் கூட சாலைகள் இன்னும் போடாமல் உள்ளது. எனவே நான் அமைச்சரை அவர் கோவைக்கு வரும்போது கோவை தெற்கு தொகுதிக்கு ஒருமணி நேரம் வந்து இங்கு உள்ள அமைப்புகளை அழைத்து அவரிடம் நிலைமையை எடுத்துக்கூற சொல்கிறேன் என கூறியுள்ளேன், என்று வானதி கூறினார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில் விவாதங்களில் பா.ஜ.க பங்கேற்றுள்ளதாக கூறிய அவர், இந்த கூட்டங்களில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பற்றியும், பிற திட்டங்கள் பற்றியும் பாஜக தரப்பில் முன்வைத்த முழுமையான கருத்துக்கள் அடங்கிய வீடியோவை சட்ட பேரவை அலுவலகத்திடம் கேட்டால் அவர்கள் அதை தர மறுகின்றனர். அதை பயங்கரமாக திருத்தும் (எடிட்) செய்து தருகின்றனர்.

தொகுதி மக்களுக்காக நாங்கள் சட்டமன்றத்தில் முழுவதுமாக பேசிய, நாங்கள் எழுப்பிய கேள்விகளை காட்டுவதற்கு கூட எங்களிடம் விடியோக்கள் இல்லை. ஆனால் நாங்கள் கேட்டகேள்விக்கு பதிலளிப்பதை மட்டும் வெளியிடுகின்றனர். தமிழக சட்டப்பேரவை, சவாலான சூழல் நிறைந்த , ஜனநாயக தன்மையுடன் இயங்காதா சட்டப்பேரவையாக உள்ளது.

இவ்வாறு கோவை பற்றி பேசுகையில் அவர் கூறினார்.

Pic: Google Images/Arosia