வெள்ளலூர் குப்பை கிடங்கில் மெகா சோலார் மின் நிலையத்தை அமைத்திட கோவை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக வெள்ளலூர் குப்பை கிடங்களில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள பழைய குப்பைகளை அகற்றி அங்கு இந்த சோலார் மின் நிலையத்தை அமைத்திட திட்டமிட்டுள்ளது.

மொத்தம் 25 மெகா வாட் திறன் கொண்ட இந்த சோலார் மின் நிலையத்தில் இருந்து உருவாகும் மின்சாரம் மூலம் கோவை மாநகராட்சிக்கும் மிக பெரும் பலன் கிடைக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.10 கோடி யை கோவை மாநகராட்சி மின்சார கட்டணமாக செலுத்தி வருகிறது. இந்த சோலார் மின் நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது கோவை மாநகராட்சி கிட்டத்தட்ட ரூ.7 கோடி வர மிச்சமாகும் என கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மொத்தம் ரூ.150 கோடி மதிப்பில் இந்த திட்டம் நடைபெறவுள்ளது. இது கோவையின் மிகப்பெரிய சோலார் மின் நிலையமாகவும் இருக்கும்.இது இயக்கத்திற்கு வந்து 6-7 ஆண்டுகளில் கோவை மாநகராட்சி மின் கட்டணமே செலுத்த தேவைப்படாது.