கோவை மாநகரில் எப்போதுமே பரபரப்பாக இருக்கக்கூடிய பேருந்து நிலையங்களில் ஒன்று கோவை மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம்.
கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல இந்த நிலையம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் அதிகரித்து வரும் பயணிகள் தேவைக்கு ஏற்ப இங்கு புது கட்டமைப்புகள் வழங்கவேண்டியுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை நவீன முறையில் சீரமைக்க கோரிக்கைகள் கடந்த சில காலமாக இருந்துவருகிறது.
இந்நிலையில் இன்று இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், சென்னை இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி (IIT) பேராசிரியர் தளிநாயுடு அவர்கள் தலைமையிலான சிறப்பு நிபுணர் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
சுமார் ரூ. 30 கோடியில் இந்த பேருந்து நிலையத்தை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது தொடர்பாக பணிகள் நடைபெறுகிறது.