கோவை என்.எஸ். ஆர் சாலை - தடாகம் சாலை சந்திப்பை விரிவாக்கம் செய்ய கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவிலா பள்ளி அருகே வரக்கூடிய இந்த சந்திப்பை அணைகட்டி, மருதமலை, வடவள்ளி, கணுவாய் மற்றும் தடாகம் செல்லக்கூடிய பேருந்துகள், பள்ளி வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றன. தற்போது இந்த சந்திப்பில் உள்ள இடம் போதுமானதாக இல்லாததாக வாகன ஓட்டிகள் உணர்கின்றனர்.
குறிப்பாக பேருந்துகள் இந்தவழியே திரும்புவதில் சிரமமுள்ளதாகவும் கருத்துக்கள் எழுந்துள்ளன. எனவே கோவை மாநகராட்சி சார்பில் இந்த சந்திப்பில் உள்ள எல்லைகளை நிர்ணயம் செய்யவும், அங்கு ஆக்கிரமிப்பு இருந்தால் அதை அடையாளம் கண்டு, அகற்றி விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை என்.எஸ். ஆர் சாலை - தடாகம் சாலை சந்திப்பை விரிவாக்கம் செய்ய கோவை மாநகராட்சி திட்டம்
- by David
- Feb 05,2025