கோவை மாவட்டத்தில் கருவேப்பிலை தொகுப்பு அமைக்கப்படும் என இன்று அறிவிக்கப்பட்ட 2023-24க்கான வேளாண் பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

 

கோவையில் கருவேப்பிலை தொகுப்பு அமைக்கப்படுவதுடன் கருவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க 5 ஆண்டுகளில் 1500 ஹெக்டேரில் செயல்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு நடப்பாண்டில் ரூ.530 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

வேளாண் பல்கலைக்கழகத்துக்கு ரூ.100கோடி நிரந்தர மூலதன வைப்பு நிதியாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பல்கலைகழகம் கோவையில் தான் தலைமையிடம் கொண்டுள்ளது. 

 

பூச்சிகள் பற்றிய புரிதலை அதிகரிக்க இந்த  பல்கலைகழகத்தில் உள்ள பூச்சிகள் அருங்காட்சியகம் ரூ.3 கோடியில் மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

இது மட்டும் இல்லாமல் கோவையில் உள்ள இப்பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவை (Botanical Garden) சீரமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யபடுகிறது.