கேரள அரசைப்போல தமிழக அரசும் ஆட்டோ முன்பதிவு செயலியை உருவாக்கி, நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், பயணத்திற்கான நியாயமான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலிறுயுறுத்தி கோவையில் உள்ள ஏ.ஐ.டி.யூ.சி ஆட்டோ தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று அவர்கள் பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். இதில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆட்டோ செயலி எடுபடுமா?
கேரளாவில் கடந்த 2022 ஆம் ஆண்டுஆகஸ்ட் மாதம் 'கேரளா சவாரி' எனும் செயலியை அரசு அறிமுகம் செய்திருந்தது. ஆனால் இதில் ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் குறைவாக இருப்பதாக கூறி ஓட்டுனர்கள் இந்த செயலி மூலம் இயங்குவதை குறைத்துள்ளனர். இதனால் பீக் ஹவர்களில் நகரங்களில் தேவையான அளவு வாகனங்கள் இல்லாமல் போய்யுள்ளது.
பொதுமக்கள், ஓட்டுனர்கள் இருவரும் பயனடையும் வகையில் நியாயமான கட்டணத்தை நிர்ணயம் செய்தால் மட்டுமே இந்த செயலி எடுபடும்.