கோவை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் உள்பட கோவை மாநகராட்சியின் பிற கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் மறுக்கப்பட்டதாக தெரியவருகிறது. இதனால் அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன் உள்ளிட்ட மூவரும் மேயர், கமிஷனர் இருக்கை முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் கோவை மாநகராட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
"மாமன்றக் சாதாரணக் கூட்டத்தில், 47-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர். பிரபாகரன், மாமன்றகூட்டம் அமைதியான முறையில் நடைபெறுவற்கு இடையூறாக செயல்பட்ட காரணத்தினாலும், அவரை பலமுறை இருக்கையில் அமரச்சொல்லியும் தொடர்ந்து நின்றுகொண்டு அவைநெறிகளுக்கு முரணாக நடந்துகொண்டதாலும், அவையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முற்பட்டதாலும், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 உள்ளடக்கிய தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023, விதி 160(8) உட்பிரிவு (i) (a,b,c,d,e), (ii), (iii) -இன்படி, 47-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர். பிரபாகரனை அடுத்த இரண்டு மாமன்றக் கூட்டங்களுக்கு தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் சஸ்பெண்ட்!
- by David
- Dec 30,2024