கோவை அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச்.மருத்துவமனை அருகே கோவை மாநகர காவல் துறையுடன் இனைந்து மருத்துவமனை நிர்வாகம் அமைத்த பெலிகான் சிக்னலை கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

இதனால் மருத்துவமனையில் இருந்து வெளியே வருபவர்கள், மருத்துவமனைக்குள் சாலையின் மறுபுறம் இருந்து உள்ளே நுழைபவர்கள் மற்றும் அந்த வழியே சாலையை கடக்கும் பாதசாரிகள் எளிதில் இனி கடந்து செல்ல முடியும். 
இந்த சிக்னல் தானியங்கி முறையில் இயங்கும். கூட்டம் அதிகமாக இருந்தால் பொதுமக்களும்  உபயோகிக்கலாம் என தெரியவருகிறது. 

பெலிகன் சிக்னல் கம்பங்கள் சாலையின் 2 புறமும் இருக்கும். அந்த கம்பங்களில் மஞ்சள் நிறத்தில் ஒரு கண்ட்ரோல் அமைப்பு இருக்கும். அதில் உள்ள பட்டனை சாலையை கடக்க விரும்பும் மக்கள் அழுத்தினால், குறிப்பிட்ட இடைவேளை கொடுத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும். இதனால் சுமார் 20 வினாடிகள் போக்குவரத்து நிற்கும். அதன் பின்னர் வாகனங்கள் செல்லும்.  இதையடுத்து மீண்டும் சிறு இடைவேளைக்கு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் தான் மீண்டும் இந்த பெலிகன் சிக்னலை மக்கள் பயன்படுத்த முடியும்.