கோவை திருச்சி சாலை வழியாக அமைந்துள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருப்பது மருத்துவமனைக்கு வருவோர்களின் வாகனங்கள் அந்த வளாகத்திற்கு வெளியே முறையாற்றவாறு நிறுத்தப்படுவதுதான்.
இந்த ஆண்டு ஜூலையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குள் தனியார் வாகனங்கள் நுழைவதற்கு அனுமதி இல்லை என்றும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டது இதனால் வாகனங்கள் திருச்சி சாலையில் குவிவது அதிகமானது.
இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. இதையடுத்து, கோவை மாநகராட்சி இதற்கு தீர்வை கண்டறிய தனியார் நிறுவனம் ஒன்றை நியமித்தது. தற்போது அந்நிறுவனம் வாலாங்குளத்தின் கரை பகுதிக்கு அருகே காலியாக நிலம் இருப்பதை கண்டறிந்து, அதை மருத்துவமனைக்கு வரும் வாகனங்களை நிறுத்த பயன்படுத்தலாம் என பரிந்துரைத்துள்ளது.
இதுகுறித்த விரிவான அறிக்கையை அந்த நிறுவனம் கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கிய பின்னர் அதுகுறித்த நடவடிக்கைகள் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் மருத்துவமனை எதிரே ஒரு நடை மேம்பாலம் கட்டவும், மருத்துவமைக்கு வெளியே பொதுமக்களாகவே இயக்கக்கூடிய பெலிகன் சிக்னல் ஒன்றையும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை அரசு மருத்துவமனை பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு !
- by David
- Nov 21,2024