கிறிஸ்ட் தி கிங் பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்!
- by CC Web Desk
- Mar 07,2025
கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள கிறிஸ்ட் தி கிங் பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் கல்லூரி முதல்வர் ஏண்டனி பெர்னான்டஸ் வரவேற்புரை வழங்கி அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் அழகி மீனாள், முதுகலை ஆசிரியர் உமாமகேஸ்வரி, மற்றும் துணை தலைமை ஆசிரியர் மங்கையர்கரசி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்பான கருத்துக்களை வழங்கினார்.
தலைமை ஆசிரியை 'வருங்கால சந்ததியினரை ஆணும் பெண்ணும் சமம் என்ற எண்ணத்தை புகுத்தி வளர்க்க வேண்டும்' என்ற கருத்தினை முன்வைத்தார். முதுநிலை ஆசிரியர் மற்றும் துணைத்தலைமையாசிரியர், 'பெண் என்பவள் யாரையும் சார்ந்து வாழ கூடாது;முறையான கல்வி மூலம் தன் தகுதியினை உயர்த்தி கொள்ள வேண்டும்' என்ற கருத்தினை வழங்கினார்.
அடுத்ததாக போட்டியில் பங்குபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் சிறப்பாக நடைபெற்றது. ஐ. சி .சி கமிட்டீ தலைவர் மற்றும் கணிபொறியியல் துறைத்தலைவரான அமல் தீபா நன்றியுரை வழங்கினார். இறுதியாக பெண் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டு விழாவானது நிறைவுற்றது.