கோவை சிறைத்துறை மைதானத்தில், தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் 1,98,000 சதுர அடியில், செம்மொழி பூங்கா வழியே (காட்டூர் அருகே உள்ள அனுப்பர்பாளையம்) அமையவுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கான அடிக்கல்லை இன்று காலை நாட்டினர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் சுவாமிநாதன், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, அதே காந்திபுரம் பகுதியில் அமைந்து வரும் செம்மொழி பூங்கா பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது பூங்காவில் என்னென்ன வசதிகள் அமைகிறது, என்னென்ன தொழில் நுட்பங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது, எத்தனை வகை தோட்டங்கள் அமைகிறது என்பது பற்றிய விவரங்களை முதலமைச்சரிடம் அவர்களுக்கு வழங்கினார் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன். இதையடுத்து அவர் மக்களிடையே விழா உரை ஆற்றினார். அப்போது அவர் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்த நூலகம் மற்றும் அறிவியல் மையம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திறக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் இந்த நூலகத்தின் உடன் அமையும் அறிவியல் மையத்திற்கு பெரியார் பெயர் சூட்டபடும் எனவும் அறிவித்தார்.
கோவை காந்திபுரம் பகுதியில் அமையும் பிரம்மாண்ட நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
- by David
- Nov 06,2024