ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இந்தியா கூட்டணி வசமாகும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.
ஈரோட்டுக்கு 2 நாள் அரசு திட்டங்களை கள ஆய்வு செய்ய சென்ற முதலமைச்சர் இன்று மதியம் 1 மணி அளவில் கோவை திரும்பினார். அப்போது கோவையில் செய்தியாளர்களை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் KN நேரு, முத்துசாமி மற்றும் சாமிநாதன் உடனிருந்தனர்.
அப்போது முதலமைச்சரிடம் செய்தியாளர்கள், ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் அரசு பணிகள் பற்றி கள ஆய்வு நடத்தியது பற்றி கேட்டனர், அதற்கு அவர் பதிலளிக்கையில், இப்போது நடைபெறும் பணிகளை விட உற்சாகமாக பணிகளை செய்ய ஈரோடு மாவட்டத்தில் அனைவரும் உறுதியளித்துள்ளனர் என்றார். வரவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்றவேண்டும் என இலக்கை திமுக வைத்துள்ளது என கூறிய அவர், இந்த ஆய்வுக்கு பின்னர் 200க்கும் மேலே கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதுவதாக அவர் கூறினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் EVKS இளங்கோவன் மறைந்ததை அடுத்து அந்த தொகுதியில் இடை தேர்தல் வரவுள்ளது பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ஈரோடு கிழக்கு இந்தியா கூட்டணி வசமாகும். விரைவில் கூட்டணி கட்சிகளிடம் பேசி அறிவிக்கப்படும் என கூறினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இந்தியா கூட்டணி வசமாகும்! - கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து!
- by David
- Dec 20,2024