கோவை மெட்ரோ திட்டம் குறித்து முதலமைச்சர் ஆலோசனை!
- by David
- Mar 13,2025
Coimbatore
கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது.
கோவையில் மெட்ரோ திட்டத்திற்கான நில ஆய்வு பணிகள் உள்ளிட்ட சில ஆரம்ப கட்ட பணிகள் துவக்க நிலையில் உள்ளன. இந்த நிலையில் மெட்ரோ திட்ட பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.
இதில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது நிலையில் இந்த கூட்டம் நடைபெறுவது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.