கோவையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் திருட்டு போவது அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் புகாரளித்து வருகின்றனர்.
கோவை ராமநாதபுரம், பெரியார் நகர் பகுதியில் 2 நபர்கள் ஒரு வாகனத்தில் வந்து சாலையோரம் நிறுத்தி வைத்து இருந்த இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது. சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 நபர்களைபிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த நவ்புல் ரஹ்மான், மற்றும் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த முகம்மது சப்வான் என்பதும், இதில் நவ்புல் ரஹ்மான் காலையில் பிரியாணி கடையில் வேலை பார்த்து விட்டு இரவு இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது காவல்துறை நடத்திய விசாரணையில் வெளிவந்தது.
இதையடுத்து இவர்கள் திருடிய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மக்கள் கவனத்திற்கு!
உங்களுக்கு தெரிந்தவர்கள் வாகனமோ அல்லது உங்கள் வாகனமோ திருடப்பட்டுவிட்டால், வாகனம் நிறுத்தப்பட இடத்தின் அருகே உள்ள காவல் நிலையத்திற்கு விரைவாக சென்று நடந்ததை கூறி முதல் தகவல் அறிக்கை எனப்படும், FIR யை பதிவு செய்யுங்கள். அதற்கடுத்து அருகே CCTV அமைப்பு கொண்ட கடைகள், வீடுகள் இருந்தால் அவர்களிடம் இதுபற்றி பார்க்க வேண்டுகோளிடுங்கள். இன்சூரன்ஸ் நிறுவனத்திடமும் சம்பவம் பற்றி உடனே தகவல் கொடுங்கள்.
திருட்டு நள்ளிரவில் நடந்தாலும் நச்சென காட்டிக்கொடுக்கும் CCTV! ... முடிந்தவரை பொருத்துங்கள் கோவை மக்களே!
- by CC Web Desk
- Sep 28,2024