கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும் கோடநாடு எஸ்டேட் பங்குதாரர்களில் ஒருவருமான சுதாகரனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அளித்தனர்.

இந்நிலையில் சுதாகரன் விசாரணைக்கு கோவையில் இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சிபிசிஐடி குழுவினர் விசாரணை மேற்கொண்டனர் .விசாரணைக்கு பின்னர் வெளியே வந்த சுதாகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தன்னிடம் நாற்பது கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், கேட்ட கேள்விக்கு தனக்கு தெரிந்த உண்மையை தெளிவாக கூறிவிட்டதாகவும் கூறினார். விசாரணை முடிந்து விட்டது. கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளேன் என தெரிவித்தார். விசாரணை முறையாக சென்றுள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,இதை கேட்க வேண்டிய இடத்தில் கேளுங்கள் என பதில் அளித்து அவர் சென்றதாக தகவல் உள்ளது.