தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் இன்று கோவை ஆவரம்பாளையம் MG ரோடு வழியே தனது புது அடுக்குமாடி குடியிருப்புக்கு புரொமோஷன் செய்ய 2 கிலோமீட்டர் தொலைவுக்கு வரிசையாக மின்சார கம்பம், டெலிபோன்/wifi கம்பங்களில் பேனர் கட்டி உள்ளது. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி முன்பு துவங்கி MG ரோடு முடியும் வரை தொடர்ச்சியாக அந்நிறுவனம் மின் கம்பங்களில் பேனர் கட்டி விளம்பரப்படுத்தி வருகிறது. அந்த நிறுவனம் மட்டுமல்ல பலரும் இப்படி தான் அந்த கம்பங்களை பயன்படுத்திக்கொள்கின்றனர்.பொது இடங்களில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டபடுவது தடுக்க படவேண்டும் என்பது போல அரசு மின் கம்பங்களில் இதுபோன்ற விளம்பர பேனர்கள் கட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும்.