ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது மெட்ராஸ் உயர் நீதிமன்றம். தடையை மீறி பிளாஸ்டிக் கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

சுப்பிரமணிய கௌசிக் என்பவர் நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்கள் நுழைவதை தடை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சுற்றுலா வருவோருக்கு குடிநீர் பாட்டில்கள், பைகளை வாடகைக்கு தரும் திட்டத்தை அமல்படுத்தலாம் என பரிந்துரையும் செய்துள்ளது நீதிமன்றம்.