கோவை விமான நிலையத்தில் இந்த சூப்பர் உள்கட்டமைப்பை அமைக்க திட்டம்!
- by David
- Jan 22,2025
Coimbatore
கோவை சர்வதேச விமான நிலையத்தின் மூலம் வெளிநாடுகளுக்கு டன் கணக்கில் சரக்குகள் அனுப்பப்பட்டு வருகிறது. சரக்கு போக்குவரத்துக்காகவே விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த சரக்ககம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
அண்மையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து வெறும் 2 நாட்களில் 2 டன் கரும்பு ஷார்ஜாவுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது அண்மையில் கவனம் பெற்றது.
இந்நிலையில் சரக்கு போக்குவரத்துக்காக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சரக்ககத்தில் குளிர் பதன கிடங்கு அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும், சரக்ககத்தில் ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்தவும் ஆணையம் சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.