கோவை மாவட்டம், சூலூர் அருகே செஞ்சேரி மலை முருகன் கோயிலில் மலையிலிருந்து கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மலையின் மேல்பகுதியில் காரை பார்க் செய்ய நிறுத்தும் போது எதிர்பாராத விதமாக பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் இவ்விபத்து நடந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.