புகை பிடித்தவர்கள், மது குடித்தவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது என கேள்வி பட்டிருப்போம். புகை பழக்கம் உள்ளவர்கள் தானம் செய்யலாம் ஆனால் அவ்வாறு தானம் செய்வதற்கு 3 மணி முன்னரும் பின்னரும் புகை பிடிக்கக்கூடாது.

அதேபோல மது பழக்கம் உள்ளவர்களும் தானம் செய்யலாம் ஆனால் இவர்கள் தானம் செய்வதற்கு குறைந்தது 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்கு முன்னர் வரை குடித்திருக்க கூடாது.

டாட்டூ, பச்சை குத்தியவர்கள் கொடுக்கலாமா?

சுகாதார வழிமுறைகளை பின்பற்ற கூடிய டாட்டூ மையத்தில், ஒரு முறை மற்றும் பயன்படுத்தக்கூடிய ஊசி, மையை கொண்டு பச்சை/டாட்டூ, குத்திக்கொண்டவர்கள், பச்சை குத்தியத்திலிருந்து 3 மாதங்களுக்கு பின்னர் ரத்த தானம் செய்யலாம். ஒருவேளை டாட்டூ குத்தியதன் காரணமாக ஏதேனும் தோற்று ஏற்பட்டால் இந்த 3 மாதம் காலத்தில் நமது உடல் அதை எதிர்கொள்ளும். அதிலிருந்து வெளிவர இந்த இடைவெளி அவசியம்.  அதுவே நீங்கள்  டாட்டூ குத்திக்கொண்ட மையம் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது பற்றி உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் 12 மாதம் வரை பொறுத்து அதன் பின்னர் ரத்த தானம் செய்வது தான் சரியானது.

இவ்வாறு பொறுத்திருந்து தானம் செய்வதால் தொற்று நமக்கு இருந்தாலும் பிறருக்கு நம்மால் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளமுடியும். 

இதை இன்று சொல்ல காரணம் - இன்று உலக ரத்த தான தினம் / ரத்த தானம் செய்பவர்கள் தினம்.  நீங்கள் 17 வயது அல்லது அதற்கு மேல் பட்டவராகவும் உடல் எடை குறைந்தது 50 கிலோவிற்கு மேல் இருப்பவராக இருந்தாலும் நீங்கள் ரத்த தானம் செய்யலாம்.

ஆண்டிற்கு 1 முறை ரத்த தானம் செய்ய முயலுங்கள்.