கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அல்-உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ. பாஷா, உடல்நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்தார். அவரது உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி வழங்கியதற்கு கோவை மாவட்ட பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும் ஊர்வலம் அமைதியாக நடைபெற்றது.
இதற்காக தமிழக அரசை கண்டித்து மாபெரும் கருப்பு தின பேரணியை பாஜக இன்று மாலை கோவையில் நடத்துகிறது.
இந்த பேரணி கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் பேருந்து நிலைய இன்று மாலை 5 மணிக்கு துவங்குகிறது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார். இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு பாஜக சார்பில் கோவையில் கருப்பு தின பேரணி!
- by David
- Dec 20,2024