எஸ். பி. வேலுமணி இல்ல திருமண நிகழ்வில் தமிழக பாஜக தலைவர்கள்!
- by David
- Mar 03,2025
Coimbatore
முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான எஸ்.பி. வேலுமணியின் மகனின் திருமணம் இன்று கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள பெரும் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்கள் நேரில் கலந்து கொண்டனர். குறிப்பாக பா.ஜ.கவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், குஷ்பூ மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் எஸ்.பி வேலுமணியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு உள்ளது கவனம் பெற்றது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அங்கிருந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அனைவரிடமும் சகஜமாக பேசி கைகுலுக்கி தனது மரியாதையை செலுத்தினார்.