அண்ணா பல்கலை மாணவிக்கு ஏற்பட்ட பாதிப்பை கண்டிக்கும் வகையில் நேற்று சாட்டை அடி போராட்டத்தில் ஈடுபடுவேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
அதன்படியே இன்று (27.12.24) காலை 10:00 மணிக்கு கோவை விமான நிலைய சித்ராவில் இருந்த காளப்பட்டி செல்லும் சாலையில் உள்ள அவரின் இல்லத்தில் சாட்டை மூலம் தன்னைத் தானே ஏழு முறை அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் தி.மு.க ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணியாமல் 48 நாட்கள் விரதத்தை ஆரம்பித்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, 'போராக இருந்தால் கூட ஒரு பெண்ணின் மீது கை வைக்க கூடாது' என்பது தமிழழின் மரபு. பெண்கள் மற்றும் குழந்தைகள், தாய்மார்கள் மீது தொடுக்கபடக்கூடிய குற்றச்செயல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டிருக்கிறது.
முருகப்பெருமானிடம் எங்களுடைய வேண்டுதலை சாட்டைடியாக சமரிக்கப்படுகின்றோம். விரதம் இருக்கப் போகின்றோம்.ஆண்டவரிடம் முறையிட போகின்றோம். எல்லா மேடைகளிலும் திமுகவை தோலுரித்து காட்டப் போகின்றோம். 3ஆண்டுகளில் தமிழகத்தை எவ்வளவு பின்னால் கொண்டு போய் உள்ளனர் என்பதை பற்றி பேசப்போகின்றோம். திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்படும் வரை காலணியை அணிய மாட்டேன். அணியப் போவதில்லை. இது ஒரு வேள்வியாக தமிழக மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்கிறேன் என கூறினார்.
அண்ணாமலை தன்னை சாட்டையால் அடித்துக் கொண்டது ஒரு பக்கம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, மற்றொரு பக்கம் கலவையான விமர்சனங்கள் வருகிறது.
கோவையில் தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!
- by David
- Dec 27,2024