பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில காலமாகவே உள்ளது.

அவ்வப்போது இது விளைநிலங்களுக்குள்ளும் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது ஆனால் இதுவரை இந்த யானை மனிதர்கள் எவரையும் தாக்கவோ,தாக்க முயற்சிக்கவோ இல்லை.

இந்நிலையில் நேற்றிரவு மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை அங்கு தனியார் பெட்ரோல் பங்க் அருகே விற்பனைக்காக சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்த தர்பூசணி பழங்களை ஒவ்வொன்றாக எடுத்து ருசி பார்த்தது.

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யானையை விரட்ட முற்பட்டு போதும் எதை பற்றியும் கண்டுகொள்ளாமல் தர்பூசணி பழங்களை உண்டு மகிழ்ந்தது. சம்பவம் அறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அனுப்பி வைத்தனர்.