கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இன்று காலை கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள் மற்றும் வழங்கப்படும் உதவிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கும் அரசு உதவிகள் பற்றிய தகவல்கள் கொண்ட நோட்டீசுகளை  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பேருந்து நிலையத்தில் கூடியிருந்த பொதுமக்களுக்கு துறை சார்ந்த ஊழியர்கள் வழங்கினர்.