பைக் டாக்ஸிகளை தடை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சிவானந்தாகாலனி பவர்ஹவுஸ் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்நர்கள் பைக் டாக்ஸிகளை தடை செய்ய வலியுறுத்தி சாலையோரம் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

பைக் டாக்ஸிகளை தடை செய்ய வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதில் பயணிக்கும் பயணிகளின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை, விபத்து காப்பீடு இல்லை என கூறும் ஆட்டோ ஓட்டுநர்கள் உடனடியாக அரசாங்கம் இதில் தலையிட்டு அவற்றை தடை செய்ய வேண்டும் என கோரி வருகின்றனர்.

இந்நிலையில் பைக் டாக்ஸிகளை தடை செய்ய இயலாது என போக்குவரத்து துறை அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் அதையும் கடந்து  தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு திடீரென லட்சுமிமில்ஸ் பகுதியில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி பைக் டாக்சி ஓட்டுனர்கள் செய்யும் தவறு என்ன?

பைக் டாக்சி நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் பயணத்திற்கான கட்டணத்தை எவ்வளவு என்று கேட்டுக்கொண்டு, கூடுதலாக ரூ.20 ஆகும் என தெரிவிக்கின்றனர். இதற்கு சில வாடிக்கையாளர்கள் சம்மதம் தெரிவித்தாலும், சில ஓட்டுனர்கள் சவாரி சென்று கொண்டு இருக்கும் போதே அதை நிறைவு பெற்றதாக அறிவித்து விடுகின்றனர்.இல்லையென்றால், சவாரி துவங்கும் முன்பாகவே, செயலியில் பயணத்தை ரத்து செய்து விட்டு, தன்னுடன் பயணத்தை துவங்க சொல்லிவிட்டு, கட்டணத்தை முழுதுமாக பெற்றுக்கொள்கின்றனர்.

இப்படி இவர்களுடன் பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டால், பைக் டாக்சி நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு என்பது பயணம் செய்தவருக்கு கிடைக்காது. ஏனென்றால் அந்நிறுவனத்தின் மூலமாக வாடிக்கையாளர் பயணம் செய்யவில்லை என்பதே காரணம். 

அதேபோல சில பைக் டாக்சி ஓட்டுனர்கள் தாங்கள் அந்த சேவையை வழங்கும் நிறுவனத்திடம் பதிவு செய்த வாகனத்தில் வாடிக்கையாளர்களை அழைத்து செல்ல வருவதில்லை. பதிவு செய்த வாகனம் எதுவோ, அதன் உரிமங்கள் பற்றி அந்த பைக் டாக்சி நிறுவனம் ஆய்வு செய்திருக்கும்.  இவ்வாறு பதிவு செய்தது ஒரு வாகனம், பயன்படுத்துவது ஒரு வாகனம் என்பதை பக் டாக்சி நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் அந்நிறுவனத்திடம்  பதிவு செய்யாமல் வேறு ஒரு வாகனத்தில் வருவது தொடர்கிறது.

சிலர் செல்போன் பேசிக்கொண்டே சவாரியில் ஈடுபடுகின்றனர். சிலர் 2 மடங்கு கட்டணம் கேட்கின்றனர் என பைக் டாக்சி பயணிகள் சிலர் அவர்கள் அனுபவத்தை பகிர்ந்துகொள்கின்றனர்.

தடை செய்யப்படுமா?

இது சம்மந்தமாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், "2-சக்கர வாகனங்களை வணிக பயன்பாட்டுக்கு/வாடகைக்கு பயன்படுத்துவது பற்றி வழிமுறைகளை மத்திய அரசு தெளிவாக வழங்கவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசும் நீதிமன்றங்களும் இதுகுறித்து தெளிவாக என்ன சொல்கிறது என்பதை அறிந்துகொள்ள காத்து இருக்கிறோம். இப்போதைக்கு தமிழகத்தில் பைக் டாக்சி மீது எந்த தடையும் இல்லை" என தெரிவித்துள்ளார்.