2024-2025 இரண்டாம் அரையாண்டு வரை கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகிய வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு வசதியாக அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் 08.03.2025 (சனிக்கிழமை) மற்றும் 09.03.2025 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வரிவசூல் பணிகள் நடைபெறும்.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வரிவசூல் மையங்கள் மற்றும் இந்த சிறப்பு வரிவசூல் முகாம்கள் சனிக்கிழமை (08.03.2025) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (09.03.2025) ஆகிய இரண்டு நாட்களிலும் வழக்கம் போல் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயல்படும்.

எனவே, பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவிக்கின்றார்.

சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் :-