ந்தியாவின் மொத்த தங்க நகை ஏற்றுமதியில் கோவையின் பங்களிப்பு 7% என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த நகை தொழில் ஜோராக நடக்க பெரும் பங்காற்றும் பொற்கொல்லர்கள் (Goldsmiths) பணி இப்போது 70% பாதிக்கப்பட்டுள்ளது என்பது தான் தற்போதய வருந்தத்தக்க செய்தியாக உள்ளது.

தேசிய அளவில் தங்க நகை தொழில் செய்யும் நகரங்களில் கோவை 3ஆம் இடத்தில் உள்ளது. கோவையில் வடிமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் நகைகள் அமெரிக்க, மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

சில நாட்களுக்கு முன்னர் சீனாவின் தங்க கொள்முதல்  தாறுமாறாக இருந்தது. இது தங்க விலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு பின்னர் அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை குறைத்ததை அடுத்து தங்கம் மீது முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்கள் துவங்கின. இதன் காரணமாக தங்கத்தின்  விலை மீண்டும் உயர்ந்து காணப்பட்டது.  இதன் தாக்கங்கள் தங்க வியாபாரத்தில் அதிகம் ஈடுபடும் இந்தியா போன்ற நாடுகள் மீது இருந்தது.

ஜூலை மாதம் வெளியான 2024-25 பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15% லிருந்து 6% மாக குறைக்க இந்திய அரசு முடிவு செய்தது. இதனால் தங்க விலை கட்டுக்குள் வந்தது. ஆனால் தற்போது இஸ்ரேல் ஈரான் மத்தியில் பதட்டமான சூழல் உள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

தற்போது 1 கிராம் தங்கத்தின் விலை ரூ. 7,824 ஆக உள்ளது. இதனால் கோவையில் தங்க நகை பட்டறையில் பணிகள் முன்பு நடைபெற்றதில் 70% குறைவாக தான் நடைபெறுகிறது என தகவல் உள்ளது.

இதே நிலை தொடருமா?

உலகின் 2ம் பெரிய முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) நடத்திய ஆய்வில் தங்கத்தின் விலை இந்த ஆண்டு முழுவதும் மட்டுமல்லாது அடுத்த ஆண்டும் அதிகரிப்பின் தான் இருக்கும் என கூறியுள்ளது. இஸ்ரேலும், ரஷ்யாவும் தங்கள் பலத்தை அவர்கள் ஒடுக்க நினைக்கும் நாடுகள் மீது நிறுத்தப்போவது போல இல்லை. எனவே தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்கத்தான் போகிறது என எதிர்பார்ப்போம்!