கோவை வெள்ளியங்கிரியில் கிரிவலம் வந்த தூத்துக்குடியை சேந்த 18 வயது இளைஞர் புவனேஸ்வரன் என்பவர் மலை இறங்கும் போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

வெள்ளிங்கிரியின் 7ம் மலையில் இறங்கும்போது தவறி 10 மீட்டர் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளான அவர் உயிரிழந்து உள்ளதாக தெரியவருகிறது.

இந்த ஆண்டு வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்ட 3ம் உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.