போதை பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்று 2021 முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்த அலெக்ஸ் (37) எனும் கைதி உயிரிழந்துள்ளார்.
அலெக் சிறுவயதில் இருந்தே ஆஸ்துமா மற்றும் வலிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டதாக தகவல் கூறுகின்றன. இதற்காக அவர் சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
சமீபத்தில் அவருக்கு இதனால் பாதிப்பு அதிகமானது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்திருக்கிறார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய போலீசார் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த திங்கக்கிழமை அன்று இதே சிறையில் கைதி ஒருவர் சந்தேகமான முறையில் உயிரிழந்தார் என்பதால் இந்த சம்பவம் சற்று கவனம் பெற்றுள்ளது.
கோவை மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு, போலீசார் விசாரணை
- by CC Web Desk
- Jan 31,2025