கோவை மாநகரில் பரபரப்பான சரவணம்பட்டி பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் அதிகாரிகள் குழு ஒன்று ஆய்வுக்கு வந்தது.

சரவணம்பட்டி சந்திப்பில் மேம்பாலம் கட்ட முன்னர் இருந்த திட்டம் குறித்து கவனித்து, மேம்பாலம் அமய தேர்வாகியுள்ள இடத்தை அக்குழு ஆய்வு செய்து உள்ளது.

முன்னதாகவே சிங்காநல்லூர், சாய்பாபா கோவில் மற்றும் சரவணம்பட்டி பகுதியில் மேம்பாலம் அமைத்திட நெடுஞ்சாலை துறை திட்டமிட்டு இருந்தது. இந்த 3 மேம்பால திட்டங்களும் தாமதமாகி சென்ற நிலையில், சாய்பாபா காலனி சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி துவங்கி உள்ளது. சிங்காநல்லூர் மேம்பால திட்டத்திற்கு மறு டெண்டர் வெளியாக உள்ளது.

இந்நிலையில், சரவணம்பட்டி மேம்பால திட்டம் மட்டும் நிலுவையில் இருந்ததாக பார்க்கப்பட்ட நேரத்தில், அதுவும் நிஜமாக வாய்ப்பு எழுந்துள்ளது.மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இடையூறு இல்லாத வகையில் அதற்கு தேவையான வழி கொடுத்து மேம்பாலத்தை அமைக்க மாநில நெடுஞ்சாலை துறையின் தேசிய நெடுஞ்சாலை பிரிவு திட்டமிட்டுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் அதிகாரிகள் இந்த மேம்பால திட்டத்திற்கு அனுமதியை விரைவில் வழங்குவார்கள் என மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

மெட்ரோ அதிகாரிகள் பச்சைக்கொடி காட்டினால் சரவணம்பட்டி மேம்பால திட்டப்பணிகள் வேகமாக நகரும் என எதிர்பார்க்கலாம். 

சரவணம்பட்டி அருகே எதற்கு மேம்பாலம்?

கோவை மாநகராட்சியுடன் 2011ல் தான் சரவணம்பட்டி இணைக்கப்பட்டது என்றாலும் அந்த பகுதி வேகமாக வளரக்கூடிய ஒன்றாக உள்ளது. IT கம்பெணிகள், IT பூங்காக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என பலவும் சரவணம்பட்டி, கீரணத்தம் பகுதிகள் பெருகிகொண்டு வருகிறது.

மெட்ரோ ரயில் திட்டம் அங்கு செயல்படுத்தப்படும் போது அப்பகுதியின் மதிப்பு மேலும் கூடும். ஏற்கனவே IT பூங்காக்கள் பெருகிவரும் இடமாக உள்ள சரவணம்பட்டியில் TANNY SHELTERS நிறுவனத்தின் IT பூங்கா அமைகிறது, KCT குழுமத்தின் IT பூங்கா விரிவாக்கம் நடைபெற உள்ளது. ஆதித்யா கலையரங்கம் இப்போது பிரமாண்ட IT பூங்காவாக மாறியுள்ளது.இதற்கெல்லாம் மேலாக கீரணத்தம் பகுதியில் 9 ஏக்கர் நிலத்தில் Wynfra Cyber City எனும் மாபெரும் IT நகரமே அமைகிறது.

இந்த IT துறை சார்ந்த முன்னேற்றங்கள் அப்பகுதிகளில் வர, அதற்கேற்ப பொது கட்டமைப்பு முதல் பொழுதுபோக்குக்கான கட்டமைப்புகள், திட்டங்கள், குடியிருப்பு திட்டங்கள் அதிகமாக அமைய வாய்ப்புள்ளது.

இதை வைத்து ரியல் எஸ்டேட் வர்த்தகம் அங்கு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே அப்போது அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நிச்சயம் மேம்பாலம் தேவைப்படும்.