இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்புகளை நிறைவேற்றும் படி இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சாமி திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிக்கும் அன்னதான திட்டத்தை திமுக ஆட்சி அமைந்தபின்னர் விரிவுபடுத்திடும் வகையில் 3 ஆண்டுகளில் திருச்செந்தூர், சமயபுரம், ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை, ஆனைமலை, பெரியபாளையம் உள்பட 9 பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இந்த நல்ல திட்டத்தை துவக்கி வைத்ததற்காக கோவை மாவட்ட கலெக்டர் கிரந்தி குமார். இதற்கு முன்னர் மருதமலை திருக்கோயிலில் நடைபெற்று வந்த அன்னதான திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு 100 பக்தர்கள் பயனடைந்து வந்த நிலையில் இப்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பயனடைவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்திய தமிழக அரசுக்கு நன்றிகளை அவர் தெரிவித்தார்.
தற்போது வரை 11 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 760 திருக்கோயில்களில் 1 வேளை அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு 3 கோடியே 36 லட்சம் பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி மருதமலை முருகர் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகிழும் திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர்!
- by David
- Dec 26,2024