கோவையில் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவி மலர்மிதா திருக்குறளில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். தற்போது இவர் புதிய சாதனை முயற்சியாக திருக்குறளின் 1330 குறள்களுக்கும் அலகிட்டு வாய்பாடு கூறி உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை ஆல் இந்தியா வேல்ட் ரெக்கார்ட் அமைப்பு அங்கீகரித்துள்ளது என தகவல் வெளியாகி இருக்கிறது. திருக்குறளை உலக நூலாகவும் தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என்பதற்காக இதனை முன்னெடுத்துள்ளதாக மலர்மிதா தெரிவித்தார்.