கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சர்வதேச தரம் கொண்ட ஹாக்கி மைதானத்தை உருவாக்க கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கோவையில் பொது ஹாக்கி மைதானம் என்பது பலகாலமாக இல்லாத சூழல் நிலவு வருகிறது. தனியார் கல்லூரி நிறுவனங்களில் ஹாக்கிக்கான மைதானங்கள் இருந்தாலும் பொது இடங்களில் ஹாக்கி மைதானம் வேண்டுமென்ற கோரிக்கை வலுத்ததை அடுத்து அரசு தரப்பில் கோவை ஆர்.எஸ்.புரம் ஆரோக்கியசாமி சாலை மாநகராட்சி பள்ளி அருகே ரூ. 9.67 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானத்தை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இந்த மைதானத்தில் தேவையான பார்க்கிங் வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி, விளையாட்டு வீரர்கள் ஆடைகள் மற்றும் இடம், போட்டிகளை அமர்ந்து பார்க்க கேலரி வசதி என பல்வேறு அம்சங்கள் இந்த மைதானத்தில் அமையும். இது சர்வதேச தடம் கொண்ட ஒரு ஹாக்கி மைதானமாக இருக்கும்.
இந்த ஹாக்கி மைதானத்தை கட்டுவதற்கான ஒப்பந்ததாரர் உரிய முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.