கிணத்துக்கடவு ,அரசம்பாளையம் அமிர்தா வேளாண்மை கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்கள்,அவர்களின் கிராமப்புற பயிற்சியின் திட்டத்தின்கீழ், குளத்துப்பாளையத்தில், தென்னை விவசாயிகளுக்கு, தென்னையில் ஏற்படும் கேரள வாடல் நோய் பற்றிய விழிப்புணர்வும் , மரத்தின் மகசூலை குறைக்கக்கூடிய வெள்ளை ஈக்கள் மற்றும் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் முறைகளை மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கினர்.

 

கேரள வாடல் நோய் வராமல் தடுப்பதற்கும், மேலும் பரவாமல் இருப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவதற்கு மஞ்சள் ஒட்டும் பொறிகளை பற்றியும் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த உயிர் பூச்சி கொல்லியான மெட்டாரைசியம் அனிசோபினியே எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பதை பற்றி விரிவாக கூறினர்.

 

இதை விவசாயிகளும் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். அவர்கள் சந்தேகங்களுக்கு மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.கல்லூரி முதல்வர் முனைவர் சுதீஷ் மணாலில், பேராசிரியர்கள் முனைவர் சிவராஜ், முனைவர் சத்யப்பிரியா ,முனைவர் ரீனா மற்றும் முனைவர் நவீன் குமார் ஆகியோரின் வழி காட்டுதலின்படி மாணவர்கள் மகா,சுபா,அகன்ஷா,தர்ஷனா,லஷ்சயா, முரளி,அபிராம், பூர்ணா,சஜினி,ஆர்தரா,பிரிஜித் ஆகியோர் நிகழ்வினை நடத்தினர்.