கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் : ப்ரீ காஸ்ட் முறையில் சுற்றுச்சுவர் கட்ட டெண்டர் கோரியது ஆணையம்
- by David
- Feb 09,2025
கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக தமிழக அரசு ஒப்படைத்த நிலங்களை விமான நிலைய ஆணையம் பெற்றுக் கொண்டுள்ளது. இந்த பணிக்காக ஆணையம் எடுத்துக் கொண்டுள்ள 470.17 ஏக்கர் நிலத்தில் 449.59 ஏக்கர் பட்டா நிலமாகவும், மீதமுள்ள 20.58 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் ஆகும்.
இந்த நிலங்களை ஆணையம் அளவீடு செய்த நிலையில் இதற்கு அடுத்ததாக இந்நிலங்களில் சுற்றுச்சுவர் கட்ட உள்ளது. இந்த பணிகளுக்காக ஆணையம் சார்பில் டென்டர்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுச் சுவர் என்பது ப்ரீ காஸ்ட் முறையில் அமைக்கப்பட வேண்டும் எனவும், இந்த நிலங்களில் எல்லை கற்களை பதிக்கவும், புவியியல் நில குறியீடுகளை பதிவு செய்யவும் வேண்டும் எனவும் இந்த டெண்டர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெண்டர்களை அடுத்த மாதம் 1ம் தேதி மாலை 5 மணிக்குள் இணைய வழயில் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் டெண்டர்கள் மார்ச் 7ம் தேதி மதியம் 3 மணிக்கு திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.