கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று இரவு இண்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. சிறிது தூரம் திருச்சி வான்வெளியில் சென்று கொண்டு இருந்த போது திடீரென்று ஏற்பட்ட தொழில்நுட்ப காரணங்களால் மீண்டும் கோவைக்கு திரும்பியது. அதில் இருந்த எரிபொருளை எரிப்பதற்காக கோயமுத்தூர் உள்ள வான்வெளியில் ஒரு மணி நேரம் சுற்றிய பின்னர் அந்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது. 

இதற்கு அடுத்து ஹைதராபாத்தில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற மாற்று விமானத்தில் கோவைக்கு விமான நிலையத்தில் இருந்த பயணிகளை ஏற்றி கொண்டு மூன்று மணி நேரத்திற்கு மேலாக காலதாமதமாக சென்றது.

அதேபோன்று இன்று காலை சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு காலை 7:40 க்கு வருகின்ற அந்த விமானம், கால தாமதமாக 9.15 மணிக்கு தரையிறங்கும் என்றும் இந்த விமானம் தாமதமாக வந்ததால் முதலில் காலை 8:40 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டு இருந்த ஹைதராபாத் விமானம் 10:15 மணிக்கு புறப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தாமதமானதால் சிங்கப்பூருக்கு செல்கின்ற விமான பயணிகள் அவதி அடைந்தனர்.