சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின் போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை விவாதிக்கக் கோரி அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளில் ஈடுபட்ட நிலையில், பேரவைத் தலைவர் அப்பாவு, கேள்வி நேரத்திற்கு பின்னர் அனுமதி வழங்குவதாக கூறியதை ஏற்கமறுத்து, பேரவையில் இருந்து இன்றும் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பேசுகையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை மாநில அரசு விசாரித்தால் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரணை வேண்டும் என கோருகிறோம்.

கள்ளச்சாராய விவகாரத்தில் ஆட்சியரே தவறான தகவல் தருவதால் ஆணைய விசாரணை சரியாக இருக்காது. நீதியை நிலை நாட்ட, உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய சிபிஐ விசாரணை அவசியமாகிறது என்பதை வலியுறுத்துகிறோம். ஆனால் இந்த அரசு மெத்தனப்போக்காக செயல்படுகிறது.சிபிஐ விசாரணை செய்தால் மட்டுமே உண்மை வெளியில் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.