கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை மாநில அளவிலான மாபெரும் உழவர் தின விழா கண்காட்சி நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியை தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இதை  இன்று வேளாண்மை -உழவர் நலத்துறை அமைச்சர் MRK  பன்னீர்செல்வம் மற்றும் வீடு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பல்கலையின் துணை வேந்தர் கீதா லட்சுமி முன்னிலையில் துவக்கி வைத்தனர்.

இதில்  300-க்கும் மேற்பட்ட அரங்குகளில் தொழில்நுட்ப கருத்தரங்குகள், செயல் விளக்கங்கள், புதிய பயிர் ரகங்கள், பயிர் ஊக்கிகள், பூச்சி நோய் எதிர்ப்பு காரணிகள், அங்கக வேளாண் இடுபொருட்கள், நானோ தொழில்நுட்பங்கள், மதிப்பூட்டல் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் வேளாண்மை, நீர் பாசன கருவிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்படுகின்றன.

இந்நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த 6 விவசாயிகளுக்கு வேளாண்மை விருதுகள் வழங்கப்பட உள்ளது. இக்கண்காட்சியினை பார்வையிட அனுமதி முற்றிலும் இலவசம்.


(கூடுதல் தகவல்கள் விரைவில்)