கோவை மாநகராட்சி பள்ளியில் வெர்ச்சுவல் ரியாலிட்டி வசதி கொண்ட தொழில்நுட்ப ஆய்வகம்
- by CC Web Desk
- Feb 13,2025
கோவை மாநகராட்சி பள்ளிகளில், ஏ.ஆர்., - வி.ஆர். என்கிற புரட்சிகரமான தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது, மாணவர்களின் கற்றல் அனுபவத்தை உணர்வுபூர்வமாக மாற்றும்.
இவ்விரு தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆய்வகங்கள், கோவை மாநகராட்சியில் ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் மாநகராட்சி பள்ளியிலும், மற்றொரு மாநகராட்சி பள்ளியிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் மாணவர்களுக்கு மேம்பட்ட கற்றல் அனுபவம் கிடைக்கும்; கடினமான பாடங்களை கூட எளிதாக புரிந்து கொள்ள முடியும். இத்தொழில்நுட்பம் வாயிலாக கற்பிக்கும் முறைகள் மாணவர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களின் ஆர்வம் மற்றும் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்யும். 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு இதற்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வகங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தகவல் : SMK