கோவையிலிருந்து சென்னைக்கும் பெங்களூருக்கும் வந்தே பாரத் ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது வரை மொத்தம் இரண்டு வந்தே பாரத் ரயில் சேவைகள் கோவையிலிருந்து இயக்கப்படும் நிலையில் மேலும் கூடுதலாக சில வந்தே பாரத் ரயில் சேவைகள் வேண்டும் என்று வேண்டுகோள் எழுந்துள்ளது.
கோவையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு எர்ணாகுளம் வழியே வந்தே பாரத் ரயில் சேவை ஒன்று வேண்டும் என LUB - தமிழ்நாடு எனும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான அமைப்பு ரயில்வே அமைச்சகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவைக்குத் தேவையான பல்வேறு ரயில்வே துறை சார்ந்த சேவைகளையும் கட்டமைப்புகளையும் குறித்த வேண்டுகோள்களை இந்த அமைப்பு டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து வழங்கியுள்ளது.
அதில் கோவை திருவனந்தபுரம் இடையே மத்திய பாரத் ரயில் சேவை வேண்டும் என்கின்ற வேண்டுகோள் உடன் கோவை மாநகரில் சர்குலர் ரயில் சேவை வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து பரிசீலிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் இந்த அமைப்பு கூறியுள்ளது.
மற்றும் 2 வந்தே பாரத் ரயில்!
கர்நாடகாவில் உள்ள மங்களூர் மற்றும் கோவை இடையே ஒரு வந்தே பாரத் சேவையை வழங்க வேண்டும் என்ற வேண்டுகோள் எழுந்துள்ளது. கோவை,மங்களூர் இடையே உகந்த நேரத்தில் 2 ரயில் சேவைகள் மட்டுமே உள்ளதால், இந்த வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகப்படுத்தினால் குறைந்த நேரத்தில் இரு முக்கிய நகரங்களுக்கிடையே பயணங்கள் மேற்கொள்வதற்கு பயணிகளுக்கு மிகவும் வசதியாக அமையும்.
இதே போல கோவை வழியே எர்ணாகுளத்தில் இருந்து KSR பெங்களூரு சிட்டி சந்திப்பு இடையே வந்தே வாரத்தில் சேவை ஒன்று வேண்டும் இடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கோவை வழித்தடத்தில் 3 கூடுதல் வந்தே பாரத் ரயில்கள் இயங்குவது சாத்தியமாகுமா ?
- by David
- Sep 18,2024