பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோயில் உள்ளது. பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்திற்குப் படப்பிடிப்பிற்கு வருகை தரும் நடிகர்-நடிகைகள் ஏராளமானோர் மாசாணியம்மன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் யோகி பாபு கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
இதனிடையே 'சூர்யா 45' என்ற புதிய படத்தின் ஷூட்டிங் மாசாணி அம்மன் கோயிலில் தொடங்கியது. மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளதால் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு, சென்ற சூர்யா, பாலாயம் செய்யப்பட்ட இடத்தில் சாமி தரிசனம் செய்தார். சூர்யாவுடன் நடிகரும் இயக்குனருமான RJ பாலாஜி இருந்தார்.
திடீரென நடிகர் சூர்யா கோவிலுக்கு வந்ததால் பொதுமக்கள் அவருடன் முட்டி மோதி செல்பி எடுக்க முயன்றனர்.
சூர்யாவின் மனைவி ஜோதிகா இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயிலில் சூர்யா... திருப்பதியில் ஜோ...
- by CC Web Desk
- Nov 27,2024