வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார். சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது. 

 

இந்திய விமானப்படையில் பணியாற்றிய டெல்லி கணேஷ், நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அந்த பணியை விட்டு, நடிகரானர். இயக்குனர் கே.பாலச்சந்தரின் ‘பட்டின பிரவேசம்’ படத்தின் மூலம் அவர் சினிமாவில் அறிமுகமானார். பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் திரையுலகை கலக்கினார் டெல்லி கணேஷ்.