அனைத்து ஆவின் பால் அட்டை நுகர்வோரின் வசதிக்காகவும், அவர்களின் பணத்திற்கு பாதுகாப்பு கருதியும், கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட் எனும் ஆவின் நிறுவனமானது ரொக்க பணபரிவர்த்தனையை 01.01.2025 முதல் முற்றிலும் இரத்து செய்து விட்டு 01.01.2025 முதல் இணையவழியாக பணம் செலுத்துவபவர்களுக்கு மட்டும் பால் அட்டை வழங்கும் வசதியை (Online Milk Card Purchase System) அறிமுகம் செய்கிறது.
எனவே இந்த வாய்ப்பினை அனைத்து ஆவின் நுகர்வோர்களும் பயன்படுத்தி (UPI Payment/Debit/Credit Card/Net Banking) மூலமாக பணம் செலுத்தி சலுகை விலையில் மாதாந்திர பால் அட்டையை 01.01.2025 முதல் ஆவின் ஆர்.எஸ்.புரம் விற்பனை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பால் அட்டையானது 01.01.2025 முதல் Online மூலம் பணம் செலுத்துவபவர்களுக்கு மட்டுமே விநியோகம் செய்யப்படும். ஆர்.எஸ்.புரம் தவிர பிறவிற்பனை அலுவலகத்தில் பால்அட்டை வழங்கப்படமாட்டாது.
ஆவின் பால் முகவர்களுக்கு...
ஆவின் பால் முகவர்கள் 01.01.2025 முதல் தங்களுடைய தினசரி பால் தேவைப்பட்டியலுக்கான தொகையை இணைய வழி மூலமாக பணம் செலுத்தி தேவைப்பட்டியலை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
ஒருசில சமயங்களில் இணைய வழி சிக்னல் கோளாரு காரணமாக பணம் செலுத்துவதில் ஏற்படும் சிரம்மங்களை தவிர்க்க தங்களின் மூன்றுநாள் தேவைப் பட்டியலுக்கான தொகையை முன்கூட்டியே செலுத்துபவர்களுக்கு எவ்வித தங்கு தடையுமின்றி பால் வினியோகம் செய்யப்படும்.
தங்களது முகவர் உரிமத்தினை ஆவின் நிர்வாகம் நிர்ணயம் செய்த ரூ.5000.00 காப்புத் தொகையை செலுத்தி முகவர் உரிமத்தினை 31.12.2024க்குள் புதுப்பித்துக் கொள்ளும்படியும் தேவைப் பட்டியலுக்கான தொகையை ரொக்கமாக செலுத்துவதை பால் முகவர்கள் 01.01.2025 முதல் முற்றிலும் தவிர்க்கும்படியும் ஆவின் நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு விற்பனைப்பிரிவு அலுவலகம் ஆர்.எஸ்.புரம் அலுவலகத்திலும் மற்றும் கைபேசி எண்.9489043712 மூலம் தொடர்புகொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
Content by SMK
புத்தாண்டு முதல் இணையவழியாக பணம் செலுத்துவபவர்களுக்கு மட்டுமே ஆவின் பால் அட்டை!
- by CC Web Desk
- Dec 20,2024