கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க தடையில்லா சான்று வழங்கியது இந்திய விமான நிலைய ஆணையம்
- by David
- Feb 26,2025
Coimbatore
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது.
கோவையில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், கோவையில் குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் கட்டடம் கட்ட வேண்டுமென்றால் விமான நிலைய ஆணையத்திடம் தடையில்லா சான்று பெறவேண்டும்.
கிரிக்கெட் மைதானத்தை பொறுத்தவரை அதில் 3க்கும் மேற்பட்ட மின்விளக்கு கோபுரங்கள் பல மீட்டர் உயரத்துக்கு அமையும். எனவே ஆணையத்திடம் தடையில்லா சான்று பெறவேண்டும். இதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விண்ணப்பித்திருந்த நிலையில் விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்றிதழை வழங்கியுள்ளனர்.