கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்றவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

ரேஷன் கடையில் இலவச பொருட்கள் மற்றும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கோவையில் தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு சார்பில் இன்று செஞ்சிலுவை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு மாநில செயலாளர் ரங்கநாதன் தலைமை தாங்கினார்.  இதில் ஏராளமான பார்வையற்றோர் கலந்து கொண்டனர். 

தற்போது பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து வகை மாற்று திறனாளிகளுக்கும் மாதம் அரசு உதவித்தொகை ரூ.1500 ஆக வழங்கப்படுகிறது. ஆனால் இதனை மாதம் ரூ.5000 ஆக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை இலவசமாக தருவதற்கு அனைத்து ஆவணங்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.